Tuesday, December 15, 2020

அகாலத்தில் மறைந்த இதழியல் நேசர்

                                                                                                                 எஸ். தன்ராஜ்


2000ஆம் ஆண்டில் இதழியல் துறையில் கால்பதித்து சென்னையில் வேலையைத் தொடங்கினேன். 2004இல் திருச்சி ‘தினமணி’ பதிப்பில் செய்தியாளராகச் சேர்ந்தேன். அதற்குச் சில மாதங்களுக்கு முன்பாகவே அந்தப் பதிப்பு தொடங்கப்பட்டிருந்தது. சிறிது காலத்திலேயே அங்கிருந்த மூத்த உதவி ஆசிரியர்கள் அவரவர் ஊருக்கு இடமாற்றலாகிச் சென்றுவிட்டார்கள். அந்தக் காலத்தில் நான் உதவி ஆசிரியராகி இருந்தேன்.

அப்போது ‘தினபூமி’ நாளிதழிலிருந்து சிலர் ‘தினமணி’யில் சேர்ந்தார்கள். அப்படி வந்தவர்களில் ‘தினபூமி’ திருச்சி பதிப்பின் செய்தி ஆசிரியராக இருந்த தன்ராஜ் சாரும் ஒருவர். அன்றைய நிலையில் திருச்சி ‘தினமணி’ பதிப்பில் பணியாற்றிய உதவி ஆசிரியர்களில் மூத்தவராக இருந்தார். 2005இல் ‘தினகரன்’ நாளிதழை சன் டிவி நிறுவனம் வாங்கியிருந்த நேரத்தில் திருச்சி ‘தினமணி’யிலிருந்து 5 பேர் விலகி திருச்சி ‘தினகரன்’ பதிப்பில் சேர்ந்தோம். ‘தினகர’னிலும் என்னுடைய சக உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் தன்ராஜ் சார்.

 

‘தினபூமி’யிலிருந்து…

அவருடைய குடும்பத்திலும் அவருடைய ஊரிலும் அநேகமாக முதல் தலைமுறை பட்டதாரியாக அவர் இருக்க வேண்டும். ‘தினபூமி’யிலிருந்து ஒருவர் ‘தினமணி’ போன்ற பாரம்பரிய நிறுவனம் ஒன்றில் சேர்ந்து வேலை பார்ப்பதும், அதற்குரிய வேலைத்தரத்தை மேம்படுத்திக்கொள்வதும் எளிதான காரியமல்ல. இதழியல் பணி என்பது தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையைக் கொண்டது. இந்தப் பண்புகள் அவரிடம் இருந்தன.

இதழியல் பணியில் உள்ளூர் செய்திகளைத் தொகுத்துப் பக்கமாக்கித் தருவது என்பது இருப்பதிலேயே கடினமான வேலை. வாசகர்களுக்கும் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் அந்தப் பணியில் உள்ள சிக்கல்கள் தெரியாது. அதிலும் திருச்சி மாவட்டப் பதிப்பு என்பது தமிழ்நாட்டிலேயே சிக்கல் மிகுந்தது. காரணம், மற்ற எல்லா பதிப்புகளும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கும். திருச்சி பதிப்பில் வேலை பார்ப்பவர்கள் மட்டும் 7 மாவட்டங்களைக் (திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்) கையாண்டாக வேண்டும். ‘தினமணி’, ‘தினகரன்’ இரண்டிலுமே இதுதான் நிலைமை.

அது மட்டுமல்லாமல் இந்த மாவட்டங்கள் காவிரிப் பாசன மாவட்டங்கள். வேளாண்மை முக்கியத் தொழில். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களை அதிகம் சந்திக்கக்கூடிய மாவட்டங்களும்கூட. இப்படி பல்வேறு சவால்களை ஆண்டின் பல்வேறு காலகட்டங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்தச் சவால்களைச் சந்தித்தே மாவட்டப் பக்கங்களையும் செய்திகளையும் வழங்கிவந்தோம். திருச்சி ‘தினமணி’யில் ஒன்றரை ஆண்டு, திருச்சி ‘தினகர’னில் ஒன்றரை ஆண்டு பணிபுரிந்த பின் 2007இல் நான் சென்னைக்கு வந்துவிட்டேன். தன்ராஜ் சார் ‘தினகர’னிலேயே தொடர்ந்தார்.

இடையில் ஒரு சில முறை திருச்சி சென்றிருந்தபோது அவரையும் இதழாளர் வின்சென்டையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். என் புத்தகங்களைக் கொடுத்திருக்கிறேன். தன்ராஜ் சார் வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டவர். குறிப்பாக, இதழியல் சார்ந்த வாசிப்பின் மீதும் இதழியல் எழுத்தின் மீதும்.

 

இதழியல் நேசிப்பு

2013இல் ‘இந்து தமிழ்’ தொடங்கப்பட்டபோது, நான் சென்னை பதிப்பில் சேர்ந்தேன். அவர் திருச்சி பதிப்பில் செய்தி ஆசிரியராக இணைந்தார். மீண்டும் எங்கள் தொடர்பு அலுவல்ரீதியாகத் தொடர்ந்தது. செய்திப் பிரிவில் இருந்தாலும் இதழியல் எழுத்து சார்ந்தே அவருடைய ஆர்வம் அதிகமாக இருந்தது. அனைத்து வார இதழ்கள், இணைப்பிதழ்களை வாசிக்கக்கூடியவராகவும் பின்தொடரக்கூடியவராகவும் இருந்தார். ‘இந்து தமிழ்’ இணைப்பிதழ்கள், மலர்களை வாசித்துவிட்டு அடிக்கடி அழைப்பார், மனமாரப் பாராட்டுவார்.

கிராமத்து மனிதர்களுக்கே உரிய சொற் பிரயோகங்களுடன் சாமி, சாமி என்ற பின்னொட்டை சேர்த்தே அனைவரையும் அழைப்பார். ‘அது இல்ல சாமி’, ‘அது கிடக்கட்டும் சாமி’ என்பார். ஒரு கிராமத்திலிருந்து முதல் தலைமுறை பட்டதாரியாகி, இதழியல் போன்றதொரு புதிய துறையில் கால் பதித்து, பல தப்படிகள் கடந்து, பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து, ஒரு பதிப்புக்குப் பொறுப்பாக வருவது என்பது எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை. ‘தினகர’னிலும் ‘இந்து தமி’ழிலும் வயதில் இளைய செய்தி ஆசிரியராக இருந்தவர் தன்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

பணி சார்ந்து நடைமுறைச் சிக்கல்கள் எத்தனையோ இருந்தபோதிலும், இதழியல் பணியை நேசிக்கக்கூடிய ஒருவராக, அது சார்ந்த புகாரோ, புலம்பல்களோ இல்லாதவராக இருந்தார். உடன் பணிபுரிந்த எல்லோராலும் அவர் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய இயல்பு, தன்மை புரியாமல் பலரும் அவரை தவறாகப் புரிந்துகொண்டது பல முறை நடந்திருக்கிறது.

 

இப்படியா நடக்கும்?

இணைப்பிதழ் பக்கம் ஒன்றில் நேர்ந்துவிட்ட தவறை, அச்சாவதற்கு முன்னதாக கணினி வழியாகப் படித்துவிட்டு டிசம்பர் 2ஆம் தேதி மாலையில் சுட்டிக்காட்டினார். உடனடியாக அதைத் திருத்தினோம். அடுத்த நாள் இரவு தூங்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அதிர்ச்சியூட்டும் அந்தச் செய்தி வந்தது. தன்ராஜ் சார் இறந்துவிட்டார் என்று. என்னால், அதை ஏற்றுக்கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லை. 24 மணி நேரத்துக்கும் முன்னதாக இயல்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒருவர் சட்டென்று மடிந்துபோவதற்கு அப்படியென்ன காரணம் இருக்க முடியும் என்று மனது அரற்றியது. நீரிழிவு நோய் காரணமாக இதயத்தில் ஏற்பட்ட திடீர் பிரச்சினையால் அவர் இறந்திருக்க வேண்டும். இத்தனைக்கும் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலும் அவர் இறந்தது மிக மிக துரதிருஷ்டசவசமானது.

2020ஆம் ஆண்டில் கோவிட்-19 பலரைப் பறித்துக்கொண்டுவிட்டது. மற்றொருபுறம் இயல்பான வாழ்க்கை குலைந்து, வாழ்க்கை முறை மாற்றங்கள்-நெருக்கடிகளால் பலரை இழந்துவிட்டோம். அவர்களில் தன்ராஜ் சார் போன்ற நெருக்கமானவர்களும் சேர்ந்துவிட்டது எளிதில் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

-        ஆதி வள்ளியப்பன்

 தொடர்புக்கு: amithatamil@gmail.com


Friday, July 27, 2007

Voice of the Tribals

பழங்குடிகளின் கலகக்
குரல்

படிப்பு வாசனையை இளம் வயதிலேயே தொலைத்துவிட்ட
ஒரு பழங்குடிப் பெண். ஆனால் அவர்
மேற்கொண்ட போராட்டம் கேரளாவை நடுநடுங்க
வைத்தது. எந்த அரசியல் கட்சியின் ஆதரவும்
இன்றி ஏ.கே. அந்தோனியின் அரசை
மண்டியிட வைத்தார். வேறு வழியின்றி கேரள அரசு இறங்கி
வர வேண்டி இருந்தது.
அந்தப் போராட்டம் கேரள தலைமைச் செயலகத்துக்கு முன்
குடியிருப்புகளை அமைத்த
போராட்டம். படிப்பறிவு மிகுந்த, அரசியல் உணர்வு அதிகமுள்ள
கேரளாவிலும் மண்ணின்
மைந்தர்களான பழங்குடிகள் உரிமைகளை பெற இயலவில்லை. மாநிலத்தின்
மொத்த
மக்கள்தொகையில் பழங்குடிகள் மட்டும் மூன்றரை லட்சம் பேர். இடதுசாரி,
காங்கிரஸ்
கட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்தாலும் வறுமை, ஒதுக்கப்படுதல், அலட்சிய
உணர்வு
போன்றவற்றால் மண்ணின் மைந்தர்கள் அவதிப்பட்டனர். அவர்களது நிலங்களை
ஆக்கிரமிப்பாளர்கள் பிடித்துக் கொண்டனர். அரசோ எதையும் சட்டை செய்யாமல்
இருந்தது.
கேரளாவில் வேரூன்றியுள்ள இடதுசாரிக் கொள்கைகளும், முன்னேற்றமும்
பழங்குடிகளுக்கு
உரிய காடுகளை, உரிமைகளை முழுமையாக வழங்கவில்லை. அவர்களது
கோரிக்கைகளுக்கு 90கள் வரை
உரிய பதில் கிடைக்கவில்லை.இந்தப் பின்னணியில் வயநாடு
மாவட்டத்திலுள்ள மனந்தவாடி
பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஜானு, பழங்குடிகளின்
குரலை ஓங்கி ஒலித்தார். எந்த
அரசியல் கட்சி, சமூக அமைப்பின் ஆதரவும் இன்றி
அவரது குரல் உயர்ந்து நின்றது.வயநாடு
மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமமான
வெள்ளமுண்டாவில் பிறந்தவர் சி.கே. ஜானு.
வறுமையும், அடிமை வேலைகளும் ஜானுவை
வாழ்க்கையின் சோகமான பக்கத்துக்குத் திருப்பின.
ஏழு வயதில் வீட்டு வேலை செய்யப்
போனார். 12 வயதில் தினக்கூலியானார். பிறகு தையல்
வேலை செய்யத் தொடங்கினார்.
கடன், வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக தையல் கடையை
மூடினார். பள்ளி
படிப்பைத் தொடராத ஜானு, 80களில் நடைபெற்ற எழுத்தறிவு இயக்கம் மூலம்
படிக்கவும்
எழுதவும் கற்றுக் கொண்டார்.பழங்குடிகள் காலம்காலமாக அனுபவித்து வரும்
பல்வேறு
பிரச்சினைகளை அப்போதுதான் அவர் உணரத் தொடங்கினார். சொந்த அனுபவங்களை
அடிப்படையாகக் கொண்டு பேசத் தொடங்கினார். தீர்மானமான எண்ணம், மனோதிடத்தால்
மக்களின்
நம்பிக்கையைப் பெற்றார். அது தங்களின் குரல் என்று மற்ற பழங்குடிகள்
அடையாளப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியில் சில காலம்
இருந்தார். ஆனால் அக்கட்சித் தலைவர்கள் பழங்குடிகள் முன்னேற்றத்துக்கு உரிய
கவனம்
கொடுக்கவில்லை என்று நினைத்தார். 1982ம் ஆண்டு கட்சியை விட்டு
விலகினார்.பழங்குடிகளின் பிரச்சினைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள ஒவ்வொரு
பழங்குடி
கிராமமாக பயணம் செய்தார். அதில் கற்றுக் கொண்ட விஷயங்களை
அடிப்படையாகக் கொண்டு
பழங்குடிகளை போராட்டத்துக்கு தயார்ப்படுத்தினார். அனுபவமே
எனது வழிகாட்டி என்கிறார்
ஜானு. பழங்குடிகளை மேம்படுத்துவதால் மட்டுமே இலக்கை
எட்ட முடியும் என்று
உணர்ந்திருந்தார். அடிப்படை உரிமைகள் பற்றி
பழங்குடிகளுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தினார். ஒவ்வொரு குடும்பத்துக்கும்
தேவையான சாகுபடி நிலம் அவர்களது
பிறப்புரிமை என்று உணர்த்தினார். அவரது தீவிர
அக்கறையாலும், சொல்வன்மையாலும் வயநாடு
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான
பழங்குடிகள் அணிதிரண்டனர்.2001ம் ஆண்டு. 32
பழங்குடிகள் பட்டினிக்கு பலியாகி
இருந்தனர். அவர்கள் விஷச்சாராயம் குடித்ததால்
பலியானவர்கள் என்று அமைச்சர்
ஒருவர் விவகாரத்தை திசை திருப்ப பார்த்தார். அப்போது
கேரள பழங்குடிகள்
வரலாற்றில் மிக முக்கியமான அத்தியாயத்தை ஜானு எழுதினார்.தலைநகர்
திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தை ஜானுவும், அவரது சக போராளிகளும் ஒரு
மாதத்துக்கு மேல் முற்றுகையிட்டனர். தலைமைச் செயலக அலுவலகங்கள் முன்
பழங்குடிகள்
குடிசைகளை அமைத்தனர். 48 நாட்களுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்தது.
அவர்களது
கோரிக்கை மிகவும் அடிப்படையானது. 'பழங்குடிகளின் நிலத்தை திரும்பத்
தரவேண்டும்'
என்பதே அது. மேலும் மேலும் பழங்குடிகள் ஜானுவின் பின்னால்
அணிதிரண்டனர்.
ஆட்சியிலிருந்த ஏ.கே. அந்தோனியின் காங்கிரஸ் அரசுக்கு இது
கடுமையான நெருக்கடியை
ஏற்படுத்தியது.கடைசியில் வேறு வழியின்றி, ஒவ்வொரு
பழங்குடி குடும்பத்துக்கும்
குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் சாகுபடி நிலம்
வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்தது.
ஆனால் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற
மிகமிகக் குறைவான முயற்சிகளை மட்டுமே அரசு
மேற்கொண்டது. அளித்த வாக்குறுதி
நிறைவேற்றப்படவில்லை. வழக்கம்போல் அரசு வார்த்தை
தவறியது.அதன்பிறகு ஜானுவும்
அவரது சக தோழர்களும் தங்கள் போராட்டத்தின் மற்றுமொரு
துணிச்சலான அடியை எடுத்து
வைத்தனர். 2003ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஜானுவும்,
நக்சலைட்டாக இருந்து
பழங்குடிப் போராளியாக மாறிய எம். கீதானந்தனும் ஒரு போராட்டத்தை
தொடங்கினர்.
நூற்றுக்கணக்கான பழங்குடிகளுடன் வயநாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட
காட்டுப்
பகுதியான முத்தங்காவை கைப்பற்ற முனைந்தனர். விவசாயம் செய்வதற்கான எளிய
கருவிகளைத் தவிர அப்போது அவர்களிடம் வேறு எந்த வசதியும் இருக்கவில்லை.ஜானுவின்
போராட்ட உணர்வால் பழங்குடிகள் உத்வேகம் பெற்றனர். அரசு அதிகாரிகளின் தொடர்
எச்சரிக்கைகளை புறங்கையால் புறக்கணித்தனர். குடிசைகளை அமைத்தனர். பிறகு
நிலங்களை
உழுவதற்கு ஆரம்பித்தனர். 'இந்த மண் எனது தாய்மண். இது எனது நிலம்'
என்பதே அவர்கள்
உணர்த்த விரும்பிய விஷயம்.முள்ளை முள்ளால் எடுக்க அரசு
தீர்மானித்தது.
முத்தங்காவில் அமைக்கப்பட்டிருந்த பழங்குடி குடிசைகளை போலீஸ்
அடக்குமுறையால் அகற்ற
அரசு முயற்சித்தது. இதில் ஒரு பழங்குடியும்,
போலீஸ்காரரும் பலியாயினர்.
நூற்றுக்கணக்கான பழங்குடிகள் காயமடைந்தனர்.போலீசின்
அத்துமீறலைக் கண்டித்து பிரபல
எழுத்தாளர் அருந்ததி ராய் அரசுக்கு ஒரு கடிதம்
எழுதினார். அதன் பெயர் 'உங்கள்
கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது'. ஜானுவை
கைது செய்த போலீஸ், அவரை சித்திரவதை
செய்ய ஆரம்பித்தது. போலீஸ்காரரை கொன்றது
தொடர்பான வழக்கு உட்பட பல குற்ற வழக்குகள்
அவருக்கு எதிராகத்
தொடரப்பட்டன.பதற்றத்தில் தொடர்ந்து தவறுகளை செய்து வந்த மாநில
அரசு, அரசியல்
நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் முத்தங்கா வழக்குகளை சிபிஐ வசம்
ஒப்படைத்தது.
போலீஸ் எந்த அத்துமீறலையும் செய்யவில்லை என்று ஏமாற்றம் அளிக்கும்
வகையில்
இடைக்கால அறிக்கையை சிபிஐ சமர்ப்பித்துள்ளது. மாநில அரசே பழங்குடிகளை
ஆதரிக்கவில்லை. சிபிஐ ஆதரிக்கப் போகிறதா என்ன?உரிமைகளைக் கோரும் பழங்குடிகளின்
போராட்டம் தொடர்கிறது. ஆதிவாசி கோத்ரா மகா சபை, அதன் அரசியல் பிரிவான ராஷ்டிரிய
மகா
சபையின் தலைவராக ஜானு தொடர்கிறார். அவரது கருத்துகளை ஏந்திச் செல்லும்
வாகனமாக அந்த
அமைப்புகள் இருக்கின்றன.

பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை ஜானுவின் போராட்டம் ஓயாது.''பிறந்த மண்ணில் வாழ்வதற்கான உரிமையை பெற, இறக்கும் வரை நாங்கள் போராடுவோம்...'' அதோ ஜானுவின்
குரல் ஒலிக்கிறது.

- ஆதி

What about our villages - Is anybody out there?

எத்தனை பேர்

கிராமங்களுக்கு அறிவுத்திறனை

எடுத்துச் செல்லகிறோம்?

- பொருளாதார நிபுணர் அமலன் தத்தா

''நகரை மையமாகக் கொண்ட நடுத்தரவர்க்கத்தினரின் தேவைகள் மற்றும் நலன்களே ஒட்டுமொத்த
சமூக வலியுறுத்தல்களை கட்டுப்படுத்துகின்றன.கிராமம் என்பது வேளாண்மை மட்டுமல்ல.
கிராமங்களை மதிப்புமிக்கதாக மாற்ற வேறு தொழில்களைக் கொண்ட உகந்த பொருளாதார
மாதிரிகள் உள்ளன.

அமலன் தத்தாபொருளாதார பேராசிரியர் அமலன் தத்தா, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவித்துள்ளார். வடக்கு வங்க பல்கலைக்கழகம், விஸ்வபாரதி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும், காந்தி கல்வி அறக்கட்டளை இயக்குநராகவும் செயல்பட்டுள்ளார். உலகம் முழுவதும் காந்தியம், கல்வி, பொருளாதார வளர்ச்சி தொடர்பாக சொற்பொழிவு ஆற்றியுள்ளார். குவெஸ்ட் இதழின் இணைஆசிரியராக பணிபுரிந்துள்ளார். அவரது முதல் புத்தகம் ஃபார் டெமாகரசி (ஜனநாயகத்துக்காக) 1953ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் புத்தகத்தை அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பாராட்டியுள்ளார். தத்தாவின் சமீபத்திய புத்தகம் இன் டிபென்ஸ் ஆப் பிரீடம் -& எக்சைட்டிங் டைம்ஸ் அண்ட் கொயட் மெடிடேஷன்ஸ். விடுதலை, அமைதி, பாதுகாப்பு போன்றவற்றை உயர்த்திப் பிடிக்கும் சமூக உணர்வு கொண்ட பொருளாதாரம் தொடர்பாக தத்தாவின் கருத்துகளை இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது. நகரங்களில் உள்ள அறிவு, கிராமப்புற இந்தியாவில் பயன்படுத்தவில்லை என்றால் நாடு முன்னேற முடியாது என்கிறார் தத்தா.

''இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தை நேரில் பார்த்திருக்கிறீர்கள். அறுபது
ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருபக்கம் வலுவான பொருளாதார நிலைமையை எட்டியிருந்தாலும்,
நாட்டின் பெரும்பான்மையான பகுதியை இந்த வெற்றி தொடவேயில்லை. எந்த இடத்தில் தவறு
நிகழ்ந்தது?கொள்கைகள் தவறு என்று கூறுவதற்கில்லை. நடைமுறைப்படுத்துதலில்தான்
பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வெள்ளைக்காரர்கள் நாட்டைவிட்டு அகன்றபோது, நகரத்தை
மையமாகக் கொண்ட நடுத்தர வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது
முதலாளித்துவம்-&-பட்டாளி வர்க்கம் இடையிலான வேறுபாட்டை உருவாக்கவில்லை.விடுதலை
பெற்ற காலத்திலிருந்து, நாட்டின் பொதுவாழ்க்கைக்கு வந்த தலைவர்கள் உயர்த்திக் கொண்ட
சாதியை சேர்ந்தவராக, கல்வி பெற்றவராக, நகரை மையமாகக் கொண்டவராக, தொழில்முறையாளராக,
நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்து வருகிறார். நேரு, சர்தார்
பட்டேல் தொடங்கி சமீபகாலம் வரை பெரும்பாலான தலைவர்கள் இந்த வர்க்கத்தைச்
சேர்ந்தவர்கள்தான். இன்று நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு, இந்தத்
தலைவர்களது குணமே முக்கிய காரணம்.தத்துவ நோக்கில் பார்த்தால், வசதிகளைப் பெற்ற
வர்க்கம் மனிதத்தன்மை சார்ந்த கருத்துகளைக் கொண்டிருந்தது. அவர்களது கொள்கைகள்
தொடர்பான விளக்கங்கள் இதை பிரதிபலித்தன. பெயர்பெற்ற இந்திய அரசியல் சாசனத்தை இந்த
வர்க்கத்தின் பிரதிநிதிகள்தான் எழுதினர். இதனால் நம் நாட்டின் குறிக்கோள்கள்
சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றை கொள்கை அளவில் கொண்டிருந்தன.எழுதப்பட்டு, 10
ஆண்டுகளில் முழுமையான எழுத்தறிவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அரசியல் சாசனம்
குறிப்பிடுகிறது. சொல்லப்பட்ட கொள்கை அதுதான். ஆனால் ஆறுபது ஆண்டுகளுக்குப் பிறகு
மக்கள்தொகையின் பெரும்பாலான பகுதி, எழுத்தறிவை இன்னும் எட்டிப்பிடிக்க முடியாத
நிலையிலேயே இருக்கிறது. எனவே, தொழில் நடைமுறை என வலியுறுத்தப்படுவதற்கும்,
நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையே மாபெரும் இடைவெளி இருக்கிறது.நாம் கையாண்ட
அமைப்பு முறை இப்பொழுதும் தோற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறலாமா?அப்படிக்
கூறுவதற்கில்லை. கல்வி பற்றிய சித்தரிப்பை எடுத்துக் கொள்வோம். எழுத்தறிவின்மையை
அகற்ற வேண்டும் என்பது கொள்கை. நகரை மையமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினருக்கு
எழுத்தறிவு கிடைத்து இருக்கிறது என்பது உண்மை. கிராமங்களுக்குச் செல்லும்போதுதான்
அது தோற்றுப் போய்விடுகிறது. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பரிமளிக்கக் கூடிய,
தேர்ந்த தொழில்முறையாளர்களை நமது பல்கலைக்கழகங்கள் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டு
இருக்கின்றன. இப்படி கல்வி பெற்றவர்கள் லண்டனிலோ, நியூயார்க்கிலோ தோற்றுப்
போவதில்லை. நமது கிராமங்கள்தான் முழுமையாக தோற்றுப் போகின்றன. நம்மில் எத்தனை பேர்
நமது அறிவுத்திறனை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறோம்? இதில்தான்
நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இதில்தான் நாம் தோற்றுப்போயும் இருக்கிறோம்.இந்த
தோல்விக்கு அரசியல் தலைமைகளை மட்டும் குற்றஞ்சாட்டக்கூடாது. அதிகார வர்க்கம்,
நிர்வாக வர்க்கத்திற்கு இதில் முக்கிய பங்கு உண்டு. இந்த இரண்டு பிரிவுகளையும்
நகரத்தை மையமாகக் கொண்ட நடுத்தர வர்க்கம் கட்டுப்படுத்தியது. எனவே, நகரை மையமாகக்
கொண்ட நடுத்தர வர்க்கத்தின் தேவைகள், நலன்களை அடிப்படையாக் கொண்டே இன்றைய சமூக
வலியுறுத்தல்கள் முழுவதும் அமைகின்றன.தலைவர்கள் இதை நினைப்புடன் செய்கிறார்கள்
என்றோ, சதித்திட்டம் திட்டிச் செயல்படுத்துகிறார்கள் என்றோ கூறுவதற்கில்லை. அவர்கள்
அப்படி சிந்திக்கும் வகையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள்
வர்க்கத்தினருக்கு முன்னுரிமை கொடுப்பது, அவர்களதுதேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து
கொடுப்பது இயற்கையாக நிகழ்கிறது.நாட்டின் பொருளாதார வியூகங்களில் இந்தியாவின்
மறுபக்கம் கணக்கிலேயே கொள்ளப்படுவதில்லையே?அரசியல் ரீதியில் செலுத்தப்படும் கவனம்
கிராமங்களுக்கு எதிரானது என்று கூறமுடியாது. அறிவிக்கப்படும் கொள்கைகள் காந்தியின்
திருவடியை வணங்கியே தொடங்கப்படும். ஆனால் அது நேரெதிரான முறையில்
நடைமுறைப்படுத்தப்படும். கிராமங்களின் வளர்ச்சியை அரசு ஆதரிக்கிறது. அதற்காக
பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது. ஆனால் இந்த நிதியை இடைத்தரகர்கள்
விழுங்கிவிடுகிறார்கள்.பஞ்சாயத்து (ஊராட்சி) முறை சிறந்த ஒரு நிர்வாக முறைதான்.
ஆனால் அதன் உண்மை நிலைமை ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. கிராம பஞ்சாயத்துகளை,
நகரங்களை மையமாகக் கொண்ட அரசியல் கட்சிகள் கட்டுப்படுத்துகின்றன.(உண்மையில்
பஞ்சாயத்து தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடக் கூடாது. தேர்தல் கட்சி சார்ந்து
நடைபெறக் கூடாது. ஆனால் நடைமுறையில் சுதந்திரமாக யாரும் போட்டியிடுவதில்லை. கட்சி
சார்ந்தவர்கள், சாதிச் சார்புகள் மற்றும் பணத்தை கட்டுப்படுத்தும் வசதி
படைத்தவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்).இந்த தந்திரங்கள் காரணமாக கிராமப் பகுதி
இந்தியாவுக்கு மிகச்சிறிய அளவே அதிகாரமே கிடைக்கிறது. உண்மையான கிராமப்புற வளர்ச்சி
பற்றி இதுவரை பேசப்பட்டு வந்ததைவிட, நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அதன்
சக்தியை முழுமையாக உணரும் வகையில் கவனம் செலுத்தப்படவில்லை. பொருளாதாரம், அரசியல்,
கொள்கைகள் போன்றவை ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. ஆனால் அவை சாதி, வர்க்கத்தில்
வேர் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட கொள்கைகளைச் சார்ந்திருக்கும் இந்த நிலைமை,
வளர்ச்சியை பெருமளவு பாதிக்கிறது.எல்லாமே அரசைச் சார்ந்து இல்லை. அதிகார
வர்க்கம்தான் அரசை நடத்திச் செல்கிறது. இந்த வகையான வளர்ச்சியை ஏற்படுத்த, அதிகார
வர்க்கம் சிறந்த இயந்திரம் என்று கூறமுடியாது. கிராமப் பகுதிகளின் வளர்ச்சி எது
என்பது பற்றி தெளிவான கொள்கை நம்மிடம் இருக்க வேண்டும்.தனியார் நிறுவன
கட்டமைப்புகள் இன்னும் பொறுப்பு மிகுந்ததாக இருக்க வேண்டுமா? கவனம் செலுத்தப்படாத
இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களில் அவற்றின் பங்கு எப்படி இருக்க வேண்டும்
என்பதையும் சேர்த்தே கேட்கிறோம்.கிராம மக்கள் வெளிப்படையான சக்தியாக மாறினால்,
அதற்குப் பிறகு தனியார் நிறுவன கட்டமைப்புகள், அவர்களைக் கொண்டு ஏதாவது செய்ய
முன்வரும். புலி மிதவாதியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல,
பங்குதாரர்கள் மற்றும் லாபத்தைவிட வேறு எதையும் தனியார் நிறுவன கட்டமைப்புகள்
பெரிதாகக் கருதும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அதைத்தான் முதலில்
தூக்கிப் பிடிப்பார்கள். அதனால்தான் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது
செயல்திட்டத்தில் அடித்தட்டு மக்கள் இடையீடு செய்கிறார்கள் என்பதை
உணர்ந்துவிட்டால், தனியார் நிறுவனங்கள் சுயவிருப்பத்துடன் புதிய உற்பத்தி உறவுகளை
உருவாக்கும்.தனியார் நிறுவனங்களின் சமூக கடமை என்பது எங்கும் உச்சரிக்கப்படும்
புதிய மந்திரமாக இருக்கிறதே?சில நிறுவனங்கள் சமூகம் சார்ந்த செயல்பாடுகளை
மேற்கொள்கின்றன. ஒரு கிராமத்தை தத்து எடுத்துக் கொள்கிறார்கள், நலத் திட்டங்களை
உருவாக்குகிறார்கள், கடன் தருகிறார்கள். ஆனால் இதெல்லாம் நற்பெயர் எடுக்கும், நல்ல
சித்திரத்தை உருவாக்கும் முயற்சிகள்தான். இது கிராமப்புற இந்தியாவின் மறுமலர்ச்சியை
உருவாக்காது.எந்த தனியார் நிறுவன சக்தியும், கிராம மக்களின் ஒருங்கிணைந்த சக்திக்கு
ஈடாக முடியாது. சோகம் தரும் வகையில் வீழ்ந்துவிட்டாலும், கிராமத்தினரின்
தன்னிச்சையான எழுச்சி என்ற மாற்றை &-முன்மாதிரியை நந்திகிராமம் தூக்கி
நிறுத்துகிறது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அங்கு உருவான அபரிமிதமான
எதிர்ப்புதான். நிலஉரிமை இயக்கம் என்பது அரசியல் ரீதியில் து£ண்டிவிடப்பட்டதில்லை.
அது அரசியல் சார்பற்ற தளம். அது அப்படித்தான் இருக்கவும் வேண்டும். அரசியல்
குழுக்கள் அல்லது அரசியல் கொள்கைகளுடன் அதை இணைக்க முயல்வது அல்லது அவை ஆதிக்கம்
செலுத்த முனைவது தவறாகும். அது கிராமப்புறங்களின் எதிர்கால எழுச்சியைத்
நசுக்கும்.எழுத்தறிவின்மை, கிராம அளவில் தகவல் சென்றுசேராமல் உள்ள தேக்கநிலை
போன்றவற்றை களைந்து கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு நகரைச் சேர்ந்த
சிந்தனாவாதிகள் தேவையா?பொருளாதார அடிப்படையில் பேசினால் கிராமம் என்பது வெறும்
வேளாண்மை மட்டுமல்ல. அது இன்னும் பல நுணுக்கமான விஷயங்கள் இணைந்தது - வேளாண்மை,
கிராமத் தொழில்கள், காடுகள், மீன்வளம், கடன் திட்டம், கல்வி, பாரம்பரிய அறிவு
போன்றவற்றைக் கொண்டது. இந்த கூட்டு அமைப்புகளை கணக்கில் கொண்டு நம் நாட்டு
கல்வித்திட்டம் வடிவமைக்கப்படவில்லை. படித்த ஒரு கிராமக் குழந்தை சிறப்பாகச்
செயல்பட வேண்டுமானால் நகரத்துக்குச் செல்ல வேண்டும். தற்போதுள்ள கல்வித்
திட்டத்தைக் கொண்டு அவனோ-அவளோ கிராமத்தை முன்னேற்ற முடியாது.எழுத்தறிவு, அறிவு,
கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்றவை கிராமம் என்ற மாற்றை வலுவான ஒன்றாக
ஆக்கவேண்டும். இதற்காக எல்லா கிராமங்களையும் நகரமாக்குவதை நோக்கமாகக் கொள்ளக்
கூடாது.கிராமம் என்பது வேளாண்மை மட்டுமல்ல என்பதை உணர வேண்டும். அதைத்தவிர வேறு பல
நிலைத்த தொழில் முயற்சிகளைக் கொண்டு, கிராமங்களை மேம்படுத்தும் பொருளாதார மாதிரியை
உருவாக்க வேண்டும். இவற்றில் சில இயற்கையாகவே வேளாண்மையை நோக்கி செலுத்தக்கூடும்.
இந்த மாற்றம் வெளிப்புற காரணிகளைச் சார்ந்து இருக்கக் கூடாது. இந்த உள்கட்டமைப்பு
மாற்றம் கிராமப்புற இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.நிலம், தண்ணீர் போன்ற
இயற்கை வளங்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக எழுந்து வரும் எதிர்ப்பைப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?அடிப்படை வளங்களை தனியார்மயமாக்குவதை மக்கள் அனுமதிக்க
மாட்டார்கள். வெளியில் இருந்து வந்து வளங்களை கட்டுப்படுத்த நினைப்பவர்களை
கிராமத்தினர் எதிர்ப்பார்கள். அதற்கு கிராமமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். நமது
ஜனநாயக நாட்டில் அது தொடர்பான நடைமுறைகளுக்கு கைகொடுக்கும் அம்சங்கள் இருக்க
வேண்டும்.தங்கள் திட்டங்கள் எதிர்ப்பைச் சந்தித்து நஷ்டத்தை எதிர்கொள்ளும் என்பதை
உணர்ந்தால், தனியார் நிறுவனங்கள் திட்டங்களை மாற்றியமைக்கும். கிராமமக்களின்
ஒற்றுமை சீர்கெட்டுவிடக் கூடாது. அதற்குப் பிறகு இந்தியா ஒட்டுமொத்தமாக
முன்னேறும்.மூத்த பொருளாதார நிபுணர் என்ற வகையில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால்
ஏற்படும் நெருக்கடிகளைத் தாண்டி தனிநபர் வருமானம் (ஜி.டி.பி.) உயர்வு, பங்குச்சந்தை
சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு போன்றவை உங்களுக்கு திருப்தி தருகிறதா?இவற்றை சார்ந்து
நான் உணர்ச்சிவசப்படுவது இல்லை. குறிப்பிட்ட ஒரு நிலைக்கு அது நல்லது. தனியார்
நிறுவனங்கள், பொதுமக்கள் என்று யாராக இருந்தாலும் கடமை உணர்வுடன் செயல்பட
வேண்டும்.எடுத்துக்காட்டாக, ஒரு தனியார் நிறுவனத்தின் குறிப்பிட்ட திட்டத்தை
எதிர்க்கலாம். டாடா போன்ற நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டியதில்லை.
அவர்கள் இந்தியாவுக்கு நல்லதையும் செய்துள்ளனர். ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்த
வளர்ச்சிக்கோ, கிராமப்புற வளர்ச்சிக்கோ அவர்களை சார்ந்து இருக்க வேண்டியதில்லை.
நகரை மையமாகக் கொண்ட மூளைகள் நமக்கு நல்லதைச் செய்திருக்கின்றன.ஆனால் சமத்துவ
வளர்ச்சி, அமைதி, ஒத்திசைவு போன்றவற்றை உருவாக்கும் மாறுபட்ட ஓர் இயக்கம் நமக்குத்
தேவை. எது வளர்ச்சி பெறவில்லை என்பதில்தான் இப்பொழுது கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய,
எது வளர்ந்திருக்கிறதோ அதில் கவனம் செலுத்தத் தேவையில்லை. டாடா-க்கள் தங்களை
சிறப்பாக கவனித்துக் கொள்வார்கள். கிராமப்புற வளர்ச்சியில்தான் இப்பொழுது தீவிர
கவனம் செலுத்தப்பட வேண்டும்.

- தமிழில் ஆதி

(அடைப்புக் குறிக்குள் இருக்கும் குறிப்புகள் மொழிபெயர்ப்பாளர் கொடுத்தவை. கிராமங்கள்&-கிராமத் தொழில்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட காந்திய பொருளாதார சிந்தனை, அவரது வழியில் வந்த குமரப்பா இயற்கையை சிதைக்காத பொருளாதார வளர்ச்சியை முன்மொழிந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பேட்டியை படிக்க வேண்டும். உலகமயமாக்கல், தனியார்மயமாக்கலுக்கு நல்லதொரு மாற்று பொருளாதார மாதிரியாக காந்திய சிந்தனைகள் பயன்படுமா என்று ஆராய வேண்டும்.)

Core issues regarding Poverty, Development, Agriculture

மறக்கப்பட்ட கிராமங்கள்
பி. சாய்நாத்

நீங்கள் நாளிதழ்களையும் இதழ்களையும் மட்டும் படிப்பவர் என்றால், நம் நாட்டில் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இந்தியாவில் உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. 1980களில் 3.5 சதவீதமாக இருந்த அது, 1990களில் 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. விவசாயத்தில் முதலீடு குலைந்துவிட்டது. இந்திய தேசிய மாதிரி தகவல்சேகரிப்பு நிறுவனத்தின் (என்.எஸ்.எஸ்.ஓ.ஐ.) கணக்கெடுப்பின்படி, விடுதலை பெற்ற பிறகு 1990களில்தான் வேலை உருவாக்கம் மிகக் குறைந்த சதவீதமாக இருந்துள்ளது. நாட்டின் ஊரகப் பகுதிகளில் இது ஆண்டுக்கு 0.7 சதவீதத்துக்கும் குறைவு. 1980களில் விவசாயம் அற்ற பிற துறைகளில் வேலைவாய்ப்பு இரட்டிப்பானது, ஆனால் அது தற்போது தேக்கநிலையை அடைந்துள்ளது. கிராமப் பகுதி வளர்ச்சி சரிந்துள்ளது, ஊரக கடன் வழங்கும் முறை குலைந்துள்ளது. இதன் காரணமாக சிறு விவசாயிகள் நிலத்தை இழக்கும் வேகம் கடுமையாக அதிகரித்துள்ளது.ஆந்திரத்தில் அதிகம் விற்கும் ஈநாடு நாளிதழில் அதிகம் வெளியாகும் விளம்பரங்கள் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்ந்தவை அல்ல. கர்நாடகம், தமிழகத்தில் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் நாளிதழ்களில் அதிக விளம்பரங்களைக் கொடுக்கின்றன. அதற்கு பதிலாக ஈநாடு நாளிதழில் அதிகம் வெளியாகும் விளம்பரம், கடனைச் செலுத்த முடியாத சிறு மற்றும் குறு விவசாயிகளின் சொத்துகள் விற்பனை தொடர்பான வங்கி ஏல விளம்பரங்கள்தான் அதிகம் வருகின்றன.இந்திய வங்கிகளின் சொத்து ரூ.1,00,000 கோடி. இதில் ரூ. 62,000 கோடியை (62 சதவீதம்) வாராக்கடன் செலுத்த வேண்டிய 800த்தி சொச்சம் பணக்காரர்கள். ஆனால் அவர்களை யாரும் கேள்வி கேட்டது கிடையாது, இதுவரை விசாரணைக்கு அழைக்கப்பட்டதும் இல்லை. ஆனால், அதேநேரம் சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிறு விவசாயியின் வீட்டு மரச்சாமான்களோ, நகைகளோ நடுத்தெருவில் வைக்கப்பட்டு ஏலம் விடப்படுகின்றன.ராஜஸ்தானில் ஏழைகள் பட்டினியை சுழற்சி முறையில் மாற்றிக் கொள்கிறார்கள். உணவில்லா குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இன்றைக்கு யார் பட்டினி இருப்பது என்று முடிவு செய்து, தங்களுக்கிடையே சுழற்சி முறையில் மாற்றிக் கொள்கிறார்கள். எதைப் பார்த்து நாம் கோபப்பட வேண்டும்?இப்படி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ள மாநிலங்கள் ஆந்திரா, ராஜஸ்தான், ஒரிசா. ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் மட்டும் 19972000க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் 1800க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக மாநில சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, 54 பேர் மட்டுமே இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்கொலை செய்து கொள்வது குற்றச்செயலாக கருதப்படுவதால், மாவட்ட குற்ற ஆவணக் காப்பகங்கள் தற்கொலையின் வகைகளை பட்டியலிடுகின்றன. நிறைவேறாத காதல், பரிட்சை பயம், கணவர் அல்லது மனைவியின் நடத்தை சரியில்லாதது,... ஆனால் அனந்தபூரில் மேற்கண்ட வகைகளின் கீழ் இறந்தவர்கள் 5 சதவீதத்துக்கும் குறைவே.மிக அதிகமாக, 1061 பேர் இறந்தது வயிற்று வலியினால். இங்கு உயிரிழப்புக்குக் காரணமாக இருப்பது சிபாகெய்ஜியின் பூச்சிக்கொல்லி மருந்துதான். இந்த பூச்சிக்கொல்லி மருந்தை அரசு இலவசமாக விநியோகிக்கிறது. அந்த கிராமப்புற ஏழை மக்களுக்கு அது மட்டுமே உடனடியாக கிடைக்கிறது. (இறப்பதற்கு செலவு செய்யத் தேவையில்லை)ஏழ்மையால் வாடுவோர் வழக்கமாக நாடும் வேலைக்கான இடப்பெயர்வு என்பது, ஒரு சிலருக்காவது வேலை தந்தது. தற்காலிக வேலைகளைப் பெறுவதற்காக இடம்பெயரத் தயாராக இருக்கும் அவர்களுக்கும் தற்போது வேலை கிடைப்பதில்லை. எடுத்துக்காட்டாக, மேற்கு ஒரிசாவில் உள்ளோர் மேற்கு வங்கம், ஆந்திரம், பஞ்சாப்புக்கு ஆண்டுதோறும் இடம்பெயர்ந்து வேலைக்குச் சென்று வந்தனர். ஆனால் ஒரிசாவில் இருந்து வேலை தேடிச் சென்ற இடங்களில் எல்லாம் சம்பளம் குறைந்தது. பலர் மீண்டும் ஒரிசா திரும்பினர். ஆனால் இந்த ஊர் திரும்புதலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்கவில்லை. இப்படி ஊர் திரும்பியவர்கள், அவர்கள் வாழ்ந்த இடத்தை காலி ஏற்கெனவே செய்திருந்ததால், ஓட்டுரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதுதான், இந்த மாற்றங்களில் சிலவற்றுக்கு நேரடிக் காரணம். இறக்குமதி கொள்ளளவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை விலக்க உலக வர்ததக நிறுவனம் நிர்ணயித்திருந்த காலக்கெடு முடிவதற்கு சரியாக இரண்டு ஆண்டுகள் முன்னதாக, கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்திய விவசாயிகளால் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை என்று சித்தரிப்பது கையாலாகாதத்தனத்தையே சுட்டிக்காட்டுகிறது. சூழலில் ஏற்பட உள்ள மாற்றத்தை முன்கூட்டியே உணர்ந்த தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகள் 1980களில் விவசாயத்துக்கான மானியத்தை 2 முதல் 6 மடங்கு (சதவீதமல்ல) வரை உயர்த்தின. தற்போது மிகச் சிறிய அளவில் மானியத்தைக் குறைத்து, அரசு மானியங்களைக் குறைப்பதாக போலித் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.இந்திய விவசாயி போட்டியை சமாளிக்க முடியாதவர் என்று கூறுவது ஒரு மாயைதான். இந்தியாவில் போட்டியிடுவதற்கான களமே இல்லை. திறந்த சந்தை என்பது ஒரு பாசாங்கு நாடகம். உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியாவின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தியது யார்? அவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள்? காட் (நிகிஜிஜி) பேச்சுவார்த்தையின் தொடக்கச் சுற்றுகளின்போது இந்தியாவின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டவர்கள், மேசைக்கு அடியில் லஞ்சம் வாங்குவது போல இந்தியாவை விற்றுவிட்டனர். அதற்கு பதிலாக பணம் கொழிக்கும் வெளிநாட்டு வேலைகளை சொந்த லாபங்களுக்காக பெற்றுக் கொண்டனர்.விவசாயிகளுக்கு மானியம் வாரி வழங்கப்படுகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். மானியம் பெறுவதால் விவசாயிகள் வேளாண்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நகர்ப்புற மக்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், மானியத்தில் பெரும்பகுதி நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. உர உற்பத்தி நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன. மானியம் பெறும் விவசாயிகள் டாடா, பிர்லா, அம்பானிகள்தான். (தமிழகத்தில்கூட கூட்டுறவு கடனின் பெரும்பகுதி உரமாகவே வழங்கப்படுகிறது. கடன் வாங்கும் விவசாயியின் விருப்பத்துக்கேற்ப இயற்கை உரம் போன்றவற்றை இடமுடியாது. கடன் வாங்கிய பாவத்துக்காக உரத்தை நிலத்தில் இட்டாக வேண்டும்.)மேலும் மானியம் எப்படி கொடுக்கப்படுகிறது என்றால், அதிகமாகத் தயாரித்தால் குறைவான மானியம், குறைந்த அளவு தயாரித்தால் அதிக மானியம் வழங்கப்படும். கொள்கைப்படி, இது சிறு விவசாயிகளுக்கு உதவ வேண்டும். ஆனால் பெரும் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்துவிட்டு, தங்கள் உற்பத்தியை குறைத்துக் காண்பிப்பார்கள். அப்பொழுதுதானே அதிக மானியம் கிடைக்கும்.ஏழை விவசாயி போட்டியிடும் தகுதியுடன் இல்லை, மானியங்களால்தான் அவன் வாழ்கிறான் என்று சிலநேரம் சித்தரிக்கப்படுகிறது. உலகளாவிய நிறுவனங்களுடன் விவசாயி போட்டியிட முடியவில்லை என்றால், அவன் வேறு தொழிலை செய்ய வேண்டியதுதானே என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்னவென்றால், இந்திய விவசாயிகள் போட்டியிடுமாறு வலியுறுத்தப்படுவது அமெரிக்க விவசாயிகளுடன். அமெரிக்க விவசாயி ஆண்டுக்குப் பெறும் மானியம் எவ்வளவு தெரியுமா? ரூ. 17 லட்சம்.ஐரோப்பிய யூனியன் ஆண்டுதோறும் பால் மற்றும் பாலாடை போகிப் பண்டிகையை நடத்துகிறது. உபரி உற்பத்தியை அழிப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உள்ளூர் சந்தையில் அவற்றை சந்தைப்படுத்தினால் விலை குறைந்துவிடும் என்பதற்காக இப்படிச் செய்யப்படுகிறது. (உலக வர்த்தக நிறுவனத்தின்) வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும் கட்டாயத்தால் தொடங்கப்படும் புதிய சந்தைகள், இந்தியா அல்லது மூன்றாவது உலக நாட்டில் தங்கள் உபரியை கொட்டுகின்றன. அது ஒன்றிரண்டு மாடு வைத்திருக்கும் சைக்கிள் பால்காரரின் வாழ்க்கையை பறிக்கிறது. (ஒன்று பாலை தீயில் இட்டு அழிக்க வேண்டும். அல்லது பால்காரனை அழிக்க வேண்டும். எப்படியோ இரண்டுமே அழிப்புதான்)இருந்தாலும், உலக வர்த்தக நிறுவனம் மட்டுமின்றி, பெரும்பாலான நஷ்டங்களுக்கு மத்திய அரசின் ஒற்றைத்தன்மையான கொள்கைகள்தான் முக்கிய காரணம். இந்தியாவில் தானிய உற்பத்தி 4.5 கோடி டன் உபரி எனப்படுகிறது. உண்மையில் அது விற்பனையாகாத தானியமே. பாகிஸ்தானும் வங்கதேசமும் இணைந்து தங்கள் உபரி உற்பத்தி 50 லட்சம் டன் என்கின்றன. உலகில் ஏதுமற்ற ஏழைகளின் ஆசிய துணைக்கண்டத்தில்தான் அதிகமாக இருக்கின்றனர் எனும்போது, உபரி உற்பத்தி எப்படி சாத்தியம்?ஏழைகளின் வாங்கும் திறன் குறைவதைப் பொருத்தே உபரி உருவாகிறதே தவிர, அவர்களுக்கு உணவு கிடைத்துள்ளதா என்பதைப் பொருத்து அல்ல. இந்தியாவில் உற்பத்தியாகும் தானியத்தின் மொத்தத் தொகையை தலைக்கு தனித்தனியாகப் பிரித்தால், இந்த உபரி மாயமாய் மறைந்துவிடும். உணவு உத்தரவாதம் தொடர்பான கூப்பாடுகள் அற்பமானவை. அத்துடன், பலரின் வயிறு காலியாகவே இருக்கிறது என்ற கசப்பான உண்மையை அது புறக்கணித்துவிடுகிறது. 199194 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இடையே உணவுப் பொருள்களின் விலை நுõறு சதவீதம் அதிகரித்தது. முந்தைய பாரதிய ஜனதா அரசு மேலும் 100 சதவீதம் அதிகரித்தது. இதன் மூலம் விளிம்புநிலையில் உள்ள விவசாயிகளிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது? பட்டினி.இதைத் தாண்டி, உபரி உற்பத்தி என்பது அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதும் இல்லை. பெரும்பாலான நேரம் அது முறையற்று சேமிக்கப்படுகிறது. ஜான்சி, இதார்சி போன்ற பெரிய போக்குவரத்து சந்திப்புகளில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அக்கடாவென திறந்து கிடக்கின்றன. இந்த வகையில் உணவு தானியத்தை சேமிக்க ஒரு டன்னுக்கு ரூ. 1,500 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சேமிப்பை நாம் நம்பிக் கொண்டிருக்கும்போது, இது முறையாக மூடப்படாமல், காற்றில் புழுத்துப்போக விடப்படுகிறது. பிறகு அழுகிப் போய்விடுகிறது. இதன் காரணமாக மக்களுக்குத் தேவைப்படும் தானிய அளவு குறைகிறது. உலகிலேயே வளமான எலிகள் தொகை இந்தியாவில்தான் இருக்கிறது.ஒவ்வொரு அறுவடைக் காலம் வரும்போதும், அரசு தானியங்களை கொள்முதல் செய்கிறது, சந்தைகளுக்கு அனுப்பாமல் தேக்கி வைத்து, முறையற்று பாதுகாக்கிறது. மிகப் பெரிய கொண்டாட்டங்களுடன் ஈரான், ஈராக்குக்கு அனுப்பப்பட்ட தானியங்கள் சுவற்றில் அடித்தது போலத் திரும்பிவிட்டன. காரணம், அவை அழுகிவிட்டதுதான். அரிசி ஏற்றுமதி கொண்டாட்டத்தை விரிவாக பதிவு செய்த ஊடகங்கள், அவை திரும்ப அனுப்பப்பட்டபோது அடக்கி வாசித்தன.ஒரு பக்கம் ஊட்டச்சத்து குறைவு சதவிகிதத்தில் உச்ச நிலை, மற்றொரு பக்கம் முறைப்படி பாதுகாக்கப்படாத பெருமளவு உணவு தானியங்கள், அறிவுள்ள எந்த அரசும் வேலைக்கு உணவுத் திட்டத்தை உருவாக்கியிருக்க வேண்டும். (தற்போது 100 நாள் வேலை உத்தரவாதத் திட்டத்தில் தானியங்கள் கொடுக்கப்படுகின்றன). ராஜஸ்தானில் இது போன்ற ஒரு திட்டம் உள்ளது. தண்ணீர் பஞ்சத்தால் போராடும் பாலைவன மாநிலத்தில், வேலைக்கு உணவுத் திட்டத்தின் கீழ் அரசு தேர்வு செய்துள்ள ஒரு செயல்திட்டம் என்ன தெரியுமா? (தண்ணீரை கபளீகரம் செய்யும்) ஒரு கோல்ப் புல் மைதானம்.ஏற்றுமதிச் சந்தைகளின் மீது தீவிரஆசை கொண்ட அரசுக் கொள்கை, எதிர்பார்க்காத பல காவுகளை வாங்குகிறது. மீன் பண்ணை/இறால் பண்ணை ஏற்றுமதியால் பலப்பல அரிசி ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. ஒரு ஏக்கர் நெல் விவசாயம் 150 நாட்கள் வேலை தரக்கூடியது. கூடுதலாக 40 நாட்களுக்கு பறவைகளை விரட்டும் வேலை கிடைக்கும். அதேநேரம் ஒரு ஏக்கர் இறால் பண்ணையில் மிகக் குறைவனவர்களுக்கே வேலை கிடைக்கும்.எண்ணெய் உற்பத்தி விவசாயிகளிடம் மகசூலை அதிகரிக்குமாறு அரசு கூறியபோது, அவர்கள் அதை நிகழ்த்திக் காட்டினர். ஆனால் அரசு குட்டிக்கரணம் அடித்தது. பெருமளவு பனை எண்ணெயை (பாமாயில்) இறக்குமதி செய்தது. மகசூல் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான விலை குறைவு ஏற்பட்டது.இறால் பண்ணை அல்லது எண்ணெய் வித்து உற்பத்தியை அரசு ஊக்குவிக்க முடிவெடுத்தபோது, ஏழைகளிடம் எந்தக் கருத்தும் கேட்கப்படவில்லை. தாங்கள் முன்வைக்கும் கொள்கைகளை கடைபிடித்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது தொடர்பாக எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை.போட்டியிட இயலாதவர்கள், ஊழல்வாதிகளை ஊடகங்கள் நாயகர்கள் ஆக்குகின்றன. ஏழைகளின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் நிதியமைச்சர் அல்லது மான்டேக் சிங் அலுவாலியா போன்றோர் எந்தக் காலத்திலும் அனுமதி கேட்டதில்லை. அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் கிராமப்புற ஏழைகளின் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை.அதேநேரம், முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் கருவூலங்களில் பாதி கடனை வாங்கியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஏழைகள் அல்ல.அப்படியானால் ஏழைகள் யார். 40 சதவீதம் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள். 45 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாயிகள். அவர்கள்தான் உணவு தானியங்களை வாங்குகிறார்கள் (எவ்வளவு மோசமான முரண்). 7.5 சதவீதம் பேர் கிராமப்புற கைவினை கலைஞர்கள். எஞ்சியவர்கள் எல்லாம், மற்றவர்கள்தான். 85 சதவீத ஏழைகளுக்கு நேரடியாக நிலப்பிரச்சினை உள்ளது. அரசின் செயல்திட்டத்தில் இந்தப் பிரச்சினை எந்தக்காலத்திலும் இடம்பிடிக்கவில்லை. கிராமப்புற கைவினை கலைஞர்கள்கூட நிலமின்றியே இருக்கின்றனர்.இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஏழைகள் 7 அல்லது 8 மாநிலங்களில்தான் உள்ளனர். அந்த மாநிலங்களிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில்தான் உள்ளனர். கிழக்கு உத்தரபிரதேசம், ஒரிசாவின் உட்பகுதிகள், தெலுங்கானா, ஹைதராபாத்கர்நாடக மண்டலம் ஆகியவையே அந்தப் பகுதிகள். இதிலும் ஏழ்மையின் சாதி முகம் ரொம்பத் தெளிவாக இருக்கிறது. 5055 சதவீதம் பழங்குடியினர் மற்றும் தலித்துகள் ஏழைகள்தான். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 3639 சதவீதம் பேர் ஏழைகள். ஒரு பகுதியில் நிலப்பிரபுத்துவம் மிகுந்த ஆதிக்கத் தன்மையுடன் இருந்தால், அங்கு ஏழ்மையின் நிலை கொடியதாக இருக்கிறது. இந்த ஏழைகளில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள். விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் பெண்கள், குறிப்பாக தலித் பெண்கள்.இந்தியாவில் வறுமை மிக வித்தியாசமான முறையில் வரையறுக்கப்படுகிறது. வழக்கமாக கூறப்படுவதைக் காட்டிலும் அதிக இழப்புகள் அதில் மறைக்கப்படுகின்றன. அந்த வரையறைப்படி ஒருவரது தனிநபர் வருமானம் 2400 கேலரி மதிப்புள்ள உணவை வாங்கும் அளவு இருந்தால் அவர் ஏழையல்ல. ஒருவர் என்ன சம்பாதிக்கிறார் என்பதுதான் முக்கியத்துவம் பெறுகிறதே ஒழிய, அவரால் உணவை வாங்க முடிகிறதா என்பது கவனம் பெறவில்லை. இதற்கான காரணம் அரசியல் சாசனம் மற்றும் சோஷலிச நாடு என்று கூறப்பட்டதன் அடிப்படையில் உருவாகியிருக்கிறது.பல ஜனநாயக நாடுகளது அரசியல் சாசனத்தைப் போல, இந்திய அரசியல் சாசனமும் நீதியை வலியுறுத்தும் கருத்துகளை அழகான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறது. அந்தப் பார்வையில் அரசுதான் மக்களுக்கு வீடு, சுகாதாரம்உடல்நலம், கல்வி,... உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இந்த கடமையை அரசு நிறைவேற்றுகிறது என்ற ஊகத்தின் அடிப்படையில் நினைத்துக் கொள்ளப்படுகிறது. இதெல்லாம் கிடைத்துவிடுகிறது என்ற ஊகத்தால், உணவுப் பொருள் வாங்க மட்டுமே ஒருவர் சம்பாதிக்கிறார் என்றும், உணவுப் பொருள் வாங்கத் தேவையான பணத்தை ஒருவர் சம்பாதிக்கவில்லை என்றால் ஏழை என்றும் வரையறுக்கப்படுகிறது. ஆனால் உண்மை நிலை என்னவென்றால், ஒருவரது சம்பளத்தில் பெரும் பகுதி அரசு வழங்க வேண்டிய விஷயங்களுக்காக செலவிடப்பட்டு விடுகிறது. அரசு கடமையை நிறைவேற்றாத நிலையிலும், ஏழ்மை தொடர்பான பழைய வரையறை இன்னமும் பின்பற்றப்படுகிறது.ஏழ்மையை அகற்ற செயல்படுத்தப்படும் அரசு செயல்திட்டங்கள் மனம்போன போக்கில் உள்ளன. எடுத்துக்காட்டாக, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளோர் என்று ஒழுங்கற்ற முறையில் ஏழைகள் பிரிக்கப்படுகின்றனர். நலஉதவிகள் வழங்குவதும் மனம்போன போக்கில் நிர்ணயிக்கப்படுகிறது.ஒரே குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் இரு வேறு பிரிவுகளில் சேர்க்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட அளவு வருமானம் பெறுபவர்கள் எந்த அடிப்படையும் இன்றி இந்தப் பிரிவுகளுக்குள் அடைக்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒருவர் மிகக் குறைவாகச் சம்பாதித்தாலும் ரூ. 4,800க்கு மேல் சம்பாதிப்பதாக சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோரை முன்னேற்றி விட்டதாக கூறுவதற்காகவே அரசு இப்படிச் செய்கிறது.உண்மை நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படும் கொள்கைகளுக்கு பதில், உண்மையை உருக்குலைத்து கொள்கையின் பலன் கிடைத்துவிட்டதாக போலித் தோற்றம் உருவாக்கப்படுகிறது. கடுமையான வறுமைக்கு தள்ளப்பட்ட ஏழைகள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் உதவி அட்டைகளை விற்க ஆரம்பித்துவிட்டனர். (அந்த அட்டையின் கீழ் பல உதவிகள் கிடைக்குமே)மக்களின் மீது அக்கறை கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அரசுகள் முறையற்று செயல்படுவது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இதற்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் எண்ணிக்கை தேர்தல்களுக்கு முன் மாயாஜாலம் போலக் குறைந்துவிடுவதுதான். எடுத்துக்காட்டாக, 2001ல் நடந்து முடிந்த தேர்தல்களுக்கு முன்னால் தேசிய அளவிலான வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் சதவீதம் 26 என்று கூறப்பட்டது. இதை கணக்கிட்ட நிறுவனங்கள்தான் முந்தைய 9 அறிக்கைகளில் வறுமைக் கோடு பெரிய அளவில் மாற்றம் பெறவில்லை என்று கூறிவந்தன. ஆனால் 10வது அறிக்கை வறுமை குறைத்தலில் பெரும் சாதனை புரிந்துவிட்டதாக கொண்டாடியது. 1996ம் ஆண்டு தேர்தல்களுக்கு முன்னால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் சதவீதம் 19. அதற்கு ஒரு வாரம் முன் இரட்டிப்பாக இருந்தது!இது உண்மையாக இருந்தால், உலக வரலாற்றின் மிகப் பெரிய சாதனை, மிகப் பெரிய இந்திய சமூச சீர்திருத்தம் இதுவாகத்தான் இருக்கும். எதிர் பார்த்தது போலவே, தேர்தலுக்குப் பின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் எண்ணிக்கை 30 சதவீத நிலைக்கு உயர்ந்துவிட்டது. மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப் புகள் இந்த அறிக்கைகளின் போலிததன்மையை ஒப்புக்கொள்கின்றன.சில தனிச் சிந்தைனையாளர்களும் தற்போது ஏழ்மை வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். வாங்கும் திறன் பற்றி பன்னாட்டு குழுக்கள் நடத்தும் ஆராய்ச்சிகள், வறுமை தொடர்பான அறிக்கைகளாக மாறிவிடுகின்றன. வறுமையை ஆராய்ச்சி செய்வது அவர்கள் முதல் நோக்கமாக இருக்கவில்லை என்பதை வசதியாக மறந்துவிடுகின்றன, மறைத்துவிடுகின்றன. பொதுக் கொள்கை உருவாக்கும் நடைமுறைகள், இவற்றை ஆராய்ச்சி என்று ஏற்றுக்கொள்ளுகின்றன. சில நேரம் அந்த அறிக்கை முன்வைக்கும் முடிவுகள் குழப்பமாகவும், முற்றும் பொய்யாகவும் உள்ளன. இப்படி நடத்தப்பட்ட ஒரு ஆய்வு 30,000 வீடுகளில், 300 பிரிவுகளில் தகவல் சேகரிக்கப்பட்டதாக கூறுகிறது.இப்படி அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என எல்லாரும் வறுமையை தாள்களில் ஒழிப்பதற்கான முயற்சியே தீவிரமாக நடத்துகின்றன. இவர்களது செயல்பாட்டு வறுமை ஒழியுமா?
தமிழில் - ஆதி